spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

-

- Advertisement -

 

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
Video Crop Image

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

we-r-hiring

அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

இந்த நிலையில், மோதலைத் தடுக்க வந்த காவல்துறையினர் வடமாநிலத்தவர் இரும்பு ராடுகளைக் கொண்டுத் துரத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் 24- ஆம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரைப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பான புகாரை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டனர். இதில் காயமடைந்த காவலர் ரகுபதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!

இந்த நிலையில், மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், காவல்துறையினரை வட மாநில இளைஞர்கள் கட்டை, இரும்பு ராடுகள், பைப்புகளைக் கொண்டுத் துரத்துவதும், தாக்குவதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

MUST READ