
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு 2022- 2023 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மிகை ஊதியம் சட்டம் 2015- ன் படி, ஊதியம் பெற தகுதியான சம்பள உச்ச வரம்பு 21,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி, மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்ச வரம்பு 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரித்தொகையைக் கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.6% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி
இதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.