
வரும் அக்டோபர் 31- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இனிப்பு, கார வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி”- ஆவின் நிறுவனம் அறிவிப்பு!
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 31- ஆம் தேதி அன்று மாலை 06.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தின் அமைச்சரவை அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே கூடும் அமைச்சரவையில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.


