
தீபாவளி பண்டிகையையொட்டி, தள்ளுபடி விலையில் இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் விற்பனைச் செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சூப்பர் சேவர் காம்போ என்ற பெயரில் தள்ளுபடி விலையில், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 250 கிராம் மைசூர் பாகு, 200 கிராம் மிக்ஸர், 80 கிராம் ஆவின் பிஸ்கெட், 10 ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ பேக் 300 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

325 ரூபாய் கொண்ட இந்த காம்போ பேக் தீபாவளி பண்டிகையையொட்டி, 25 ரூபாய் விலைக் குறைக்கப்பட்டு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் நெய் பாதுஷா, 200 கிராம் பாதாம் மிக்ஸ், 200 கிராம் ஜாமூன், 10 ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ பேக் 525 ரூபாய்க்கு பதிலாக, 500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
250 கிராம் காஜூ பிஸ்தா ரோல், 250 கிராம் காஜூ கட்லி, 250 கிராம் நெய் பாதுஷா, 250 கிராம் நட்ஸ் அல்வா ஆகியவை அடங்கிய காம்போ பேக் 965 ரூபாய்க்கு பதிலாக 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.