வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் 28, 29- ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
இதேபோல், வரும் அக்டோபர் 28- ஆம் தேதி அன்று திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 29- ஆம் தேதி அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும், சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.