spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமகனின் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்த நீதா அம்பானி!

மகனின் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்த நீதா அம்பானி!

-

- Advertisement -

 

மகனின் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்த நீதா அம்பானி!

we-r-hiring

நவீன இயந்திரங்கள் வந்தாலும் கைத்தறியில் நெய்த ஆடைகளுக்கான மவுசு என்றென்றும் இருக்கவே செய்கிறது. உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்ததே இதற்கு உதாரணம்.

“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தனது கடைசி மகனின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியை மிக ஆடம்பரமாக நடத்தியிருக்கின்றனர் முகேஷ் அம்பானி தம்பதியினர். உலகின் தலைச்சிறந்த அனைத்து நிகழ்வுகளும் மூன்று நாள் நிகழ்ச்சியில் நடந்தேறியிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, உலகளவில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் புடவையைத் தேர்ந்தெடுத்தது தான் ஹை லைட்.

நமது நெசவாளர்கள் பாரம்பரியதுடன் நேர்த்தியாக நெய்து கொடுத்த காஞ்சிபுரம் பட்டுப்புடவையை தான் அணிந்திருந்தார் நீதா அம்பானி. அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழக கலைஞர்கள் தான் கருவறை கதவுகள், மணி என முக்கியமானவைகளை செய்துக் கொடுத்துள்ளனர். அதேபோல் தான் தற்போது நடந்த ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு.

புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் மஞ்சுமெல் பாய்ஸ்!

வட இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆடம்பர நிகழ்வுகளை நடத்தினாலும், தமிழர்களின் திறமை மிக்க தனித்துவம் தான், அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

MUST READ