spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!

எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம்  காத்திருந்து தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குட் ஃப்ரைடே, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி வந்தபடி உள்ளனர். ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தவிர திருப்பதியில் சீனிவாசம் காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என மூன்று இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை 60 ஆயிரத்து 101 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ. 4.03 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இன்று காலை நிலவரப்படி எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் 30 அறைகளில் காத்திருக்கின்றனர். இதனால் சுவாமி தரிசனத்திற்கு 30 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ