Homeசெய்திகள்ரஜினி இவ்வளவு சுயநலவாதியா..? வெளிவந்த பரபரப்பு ரகசியம்!

ரஜினி இவ்வளவு சுயநலவாதியா..? வெளிவந்த பரபரப்பு ரகசியம்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் 73 வயதிலும் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ வெளியானது. ‘வேட்டையன்’ ரிலீஸ் முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் ரஜினி. இந்த 75 வயதிலும், உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் ரஜினி பம்பரமாக சுற்றிவருவதை வியக்காதவர்கள் இருக்க முடியாது.

Rajinikanth and Others At The Inauguration of MGR Statue

இந்நிலையில் ரஜினி செய்த ஒரு விஷயம் பற்றி பிரபல சீரியல் நடிகர் ‘பூவிலங்கு’ மோகன், சாய் வித் சித்ரா பேட்டியில் பேசிய தகவல் வைரலாகி உள்ளது.

ரஜினி கதை எழுதி தயாரித்து இருந்த படம் ‘பாபா’. இந்தப் படத்தில் பூவிலங்கு மோகன் நடித்துள்ளார். ‘பாபா’வில் ரஜினி உடன் நடித்த அனுபவம் பற்றி ’பூவிலங்கு’ மோகன் பேசி இருக்கிறார்.

அதில், “பாபா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி என்னிடம் பேசும்போது சீரியல் ஷூட்டிங் எப்படி போகிறது, எவ்வளவு சம்பளம் தருகிறார்கள், எவ்வளவு நேரம் ஷூட்டிங் என கேட்டார். 3000 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள் என நான் கூறினேன்.

‘அவ்வளவுதானா?’ என கேட்ட ரஜினி ‘ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடிப்பீர்கள்?’ என கேட்டார். காலை 9 – இரவு 9 வரை ஷூட்டிங், காலையில் போனால் இரவு ஆகிவிடும் என்றேன். ‘ஐயோ. ஒரு நாள் முழுக்க வேலை செய்து இவ்வளவுதானா.. ரொம்ப கஷ்டம்ல’ என சொல்லிவிட்டு நடிக்க போய்விட்டார்.poovilangu mohan

அதன் பின் இரண்டு மாதங்கள் கழித்து நான் பாபா படத்தில் நடித்ததற்கு சம்பள செக் வந்தது. அதில் ஒரு நாள் சம்பளம் 3000 என கணக்கிடப்பட்டு இருந்தது. ரஜினி ஒரு பக்கா பிஸ்னஸ்மேன் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது” என மோகன் கூறி இருக்கிறார்.

இதனிடையே ரஜினி குறித்து அவருடன் இணைந்து நடித்தவரும் தற்போது சீரியல்களில் நடித்து வருபவருமான நடிகை கவிதா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியும் பேசுபொருளாகியுள்ளது. அந்த பேட்டியில் நடிகை கவிதா, “ஒருமுறை மோகன்பாபுவுடன் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது மேக்கப் மேன் பத்திரிகை ஒன்றை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். அந்த பத்திரிகையில் நானும், ரஜினியும் திருமணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தார்கள். அது பொய்யான செய்தி. எனவே அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அப்போது அங்கிருந்த மோகன் பாபு அந்த மேக்கப் மேனை அழைத்து எனக்கும், ரஜினிக்கும் திருமணம் என்ற செய்தியை வாசித்து காட்ட சொன்னார். மேக்கப் மேனும் வாசித்து காண்பித்தார். அதனை கேட்ட மோகன் பாபு உச்சக்கட்ட டென்ஷனாகி ஷூட்டிங்கிற்கு பேக்கப் சொல்ல இயக்குநரிடம் கூறினார். பேக்கப் ஆன பிறகு அந்த இயக்குநரை அழைத்துக்கொண்டு என்னைப் பற்றி எழுதியிருந்த பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று கத்திவிட்டார்.

கோட் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?..... வெங்கட் பிரபு பேட்டி!

உடனே அவர்கள் மறுப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். நான் ரஜினியுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதனால்தான் அப்படி எழுதினார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் ரஜினி மட்டுமின்றி அப்போது முன்னணி ஹீரோக்களுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றேன். இருப்பினும் ரஜினியுடன் மட்டும் ஏன் அப்படி என்னை இணைத்து பேசினார்கள் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

MUST READ