Homeசெய்திகள்இங்க நான் தான் கிங்... நான் வச்சதுதான் ரூல்ஸ்.....ரஜினியின் பஞ்ச் டயலாக்குடன் ஜெயிலர் செகண்ட் சிங்கிள்...

இங்க நான் தான் கிங்… நான் வச்சதுதான் ரூல்ஸ்…..ரஜினியின் பஞ்ச் டயலாக்குடன் ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ப்ரிவியூ!

-

ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகியுள்ளது. நெல்சன் திலிப் குமாரின் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினி இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் காவாலா எனும் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இரண்டாம் பாடல் வருகின்ற 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் ஜெய்லர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பிரிவியூ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் ரஜினியின் “ஏய் இங்க நான் தான் கிங்… நான் வச்சதுதான் ரூல்ஸ்… என் இஷ்டத்துக்கு அப்பப்ப மாத்திக்கிட்டே இருப்பேன்.. அதை கப் சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணனும் அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ண நினைச்சேன் உன்னை கண்டதுண்டமாக விட்டு கலச்சு போட்டுருவேன் ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்” என்ற மாஸான பன்ச் டயலாக் இடம் பெற்றுள்ளது. அதாவது ஜெய்லர் படத்தில் ரஜினி ஜெயலராக நடிப்பதால் அது சம்பந்தமான பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவியூ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

MUST READ