Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து சம்பவம் செய்ய காத்திருக்கும் மூன்று பெரிய திரைப்படங்கள்!

அடுத்தடுத்து சம்பவம் செய்ய காத்திருக்கும் மூன்று பெரிய திரைப்படங்கள்!

-

ஜெயிலர், ஜவான், லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக இருக்கிறது.
இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்தப் படங்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதனை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த 3 படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்கள் காத்திருக்கும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்தாக அமையும். மேலும் திரையரங்கமே சரவெடியாய் வெடிக்க போகிறது என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஜெயிலர்

ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகியுள்ளது. நெல்சன் திலிப் குமாரின் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினி இப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் காவாலா எனும் முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இரண்டாம் பாடல் வருகின்ற 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் ஜெய்லர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.

ஜவான்

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் ஷாருக்கான் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தை கௌரிக்கான் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

லியோ

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் அனுராக் காஷ்யப், நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், மடோனா செபாஸ்டியன், வையாபுரி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இவ்வாறாக இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் இப்படம் லோகேஷ் கனகராஜின் LCUவிற்கு கீழ் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. எனினும் அக்டோபர் 19இல் வெளியாக இருக்கும் இந்த படத்தை திரையரங்கில் காணும் போது தான் இதற்கான விடை கிடைக்கும்.

மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த 3 படங்களுக்கு இடையையான ஒற்றுமை என்னவென்றால் அனிருத் தான் இந்த படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் அனிருத்தின் பிஜிஎம் இந்த 3 படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் பலமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ