spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

-

- Advertisement -

வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள்வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

காராமணி என்பது அதிக ஊட்டச்சத்துக் கொண்ட ஒரு பருப்பு வகையாகும். இதில் இரும்பு, புரதம், நார்சத்து, பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்றவை நிறைந்து இருக்கிறது. இது குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

we-r-hiring

அந்த வகையில் வெள்ளை காராமணியில் உள்ள புரதச்சத்து தசைகளை உருவாக்க உதவுகிறது. இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்சனையை சரி செய்து மலச்சிக்கலை தடுக்கிறது.வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

அடுத்தது இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பிற கனிமசத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
இத தவிர இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எனவே இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.

இதிலிருந்து கிடைக்கும் போலிக் ஆசிட் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் போலிக் ஆசிட் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், முதுகுத்தண்டின் உள்ளே செல்லும் நரம்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

காராமணியை தொடர்ந்து சாப்பிடுவதால் தேவையில்லாத உணவுகளின் மேலான நாட்டம் குறையும். இதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம்.வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

எனவே காராமணியை ஊற வைத்து குழம்பு, சூப், பொரியல், சாலடாகவும் சாப்பிடலாம். இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ