காலையில் பல் துலக்குவதற்கு முன்பு நீா் குடித்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை காண்போம்.
இரவு நேர தூக்கத்திற்கு பின், காலையில் எழுந்தவுடன் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும்? நமது வாயில் இரவு நேரம் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடுகிறது. இதனால் வாய் வறட்சி அதிகரித்து துர்நாற்றம் வீசும். காலையில் தண்ணீர் குடித்தால் நல்லது என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் பல் துலக்கிய உடனே சிலர் தண்ணீர் குடிப்பார்கள். அப்படி செய்யக்கூடாதாம். பல் துலக்கிய உடனே தண்ணீா் குடிக்காமல் கொஞ்சம் இடைவெளி விட்டு குடிக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும் தண்ணீர் குடிக்காமல் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.
அதுமட்டுமல்லாமல், நம்மில் பலரும் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கின்றனர். இதனால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி வாய் புத்துணர்ச்சி பெறும். இரவில் குடலில் அமலத்தன்மை அதிகமாக சுரந்திருக்கும் அமில தன்மையை குறைத்து நீர்க்க செய்து அஜீரணத்தை குறைத்து ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் இது உதவுகிறது. காலையில் எழுந்ததும் எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு ஏற்றார் போல சருமம் ஆரோக்கியமாக இருக்கும். உடல் கழிவுகளை நீக்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.
பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை வருவதை கட்டுப்படுத்தும். சாதாரண நீர் வெதுவெதுப்பான நீர் இரண்டுமே உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என கூற முடியாது. பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும். அப்படி எந்த பக்க விளைவும் ஏற்படாது. தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
விதிகளை மீறி அனுமதி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் – நீதிபதிகள் எச்சரிக்கை



