spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

-

- Advertisement -

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்.பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?பேரீச்சம் படத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகள் அடங்கியிருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிவகை செய்யும். அது மட்டும் இல்லாமல் ரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபட பேரீச்சம் பழம் உதவும்.பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

இது தவிர பேரீச்சம் பழத்தை பாலுடன் ஊறவைத்து சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது 3 முதல் 5 பேரீச்சம் பழங்களை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே குடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த பாலை சூடாக்கியும் குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம்,
1. மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
2. செரிமானம் மேம்படும்.
3. இரும்புச்சத்து குறைபாடு தவிர்க்கப்பட்டு ரத்தசோகை நோயிலிருந்து விடுபடலாம்.
4. மேலும் இது சருமத்திற்கு ஆரோக்கியமானதாகவும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
5. அடுத்தது இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

we-r-hiring

எனவே தினமும் பாலுடன் பேரீச்சம் பழங்களை ஊறவைத்து சாப்பிட்டு நன்மைகளைப் பெறுங்கள். இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ