spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

-

- Advertisement -

காலையில் கடுகு காபி குடித்தால் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

கடுகு காபி என்பது நம் பாரம்பரிய வீட்டு மருந்துகளில் ஒன்றாகும். அதாவது இதனை சிலர் கடுகு கசாயம் என்று சொல்வார்கள். கடுகு காபி குடிப்பதனால் செரிமான சக்தி அதிகரிக்கும். இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும் என சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். கடுகு விதைகள் செரிமான நீர் இயக்கத்தை தூண்டி வாயு பிரச்சனை, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்த உதவும். கடுகு விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

we-r-hiring

தொண்டையில் வலி, சளி, கரகரப்பு போன்றவைகளுக்கு தீர்வு தரும்.காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

தற்போது கடுகு காபியை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கடுகினை எடுத்து மிதமான தீயில், நன்கு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கடுகு பொடியை நீரில் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரலாம்.

இது தவிர ஒரு கப் தண்ணீரில், அரை தேக்கரண்டி அளவு கடுகு சேர்த்து அந்த நீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் வடிகட்டி கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

குறிப்பு:
1.தேவைப்பட்டால் இதில் பால் சேர்த்து குடிக்கலாம்.
2. அரை ஸ்பூன் அளவு தான் கடுகு/கடுகு பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
3. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதனை தவிர்த்தல் நல்லது.
4. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே இதனை பருகுவது நல்லது.

MUST READ