Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்?..... இது உங்களுக்காக தான்!

உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்?….. இது உங்களுக்காக தான்!

-

பொதுவாக மருத்துவர்கள் அனைவரும் உணவு வகைகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதாவது உணவை வேகமாக சாப்பிடுவதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்?..... இது உங்களுக்காக தான்!

பெரும்பாலும் இன்றைய அவசர காலகட்டத்தில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். அப்படியே சாப்பிட்டாலும் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று வாயில் போட்டதும் அப்படியே விழுங்கி சாப்பிட்டு செல்கின்றனர். ஆனால் இது எத்தகைய தீமைகளை விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் வேகமாக சாப்பிடுவது அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். இதனால் உடல் பருமன் உண்டாகும். அதேசமயம் நீரழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதாவது வேகமாக சாப்பிடுவதனால் வயிறு நிறைந்ததா அல்லது காலியாக இருக்கிறதா என்பதை மூளையால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் செரிமான கோளாறு, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனை உண்டாகும். எனவே வேகமாக சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மெதுவாக நன்கு மென்று சாப்பிடுவதை பின்பற்றுங்கள்.உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்?..... இது உங்களுக்காக தான்!

மெதுவாக சாப்பிடுவதனால் பசி குறையும், வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கும். அத்துடன் இது குறைந்த அளவிலான கலோரிகளை உட்கொள்ள வழிவகை செய்யும். இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நீரழிவு நோயையும் தடுக்கலாம் என்ற மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

MUST READ