Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அக்குள் கருமையால் சிரமப்படுகிறீர்களா?..... உங்களுக்கான டிப்ஸ் இதோ!

அக்குள் கருமையால் சிரமப்படுகிறீர்களா?….. உங்களுக்கான டிப்ஸ் இதோ!

-

ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் அக்குள் கருமை என்பது பொதுவான பிரச்சனை. மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்தினாலும் இந்த கருமை மறையாமல் இருக்கிறது. அக்குள் கருமையால் சிரமப்படுகிறீர்களா?..... உங்களுக்கான டிப்ஸ் இதோ!இதனால் விருப்பமான ஆடைகளை அணிவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது. எனவே வீட்டிலேயே இயற்கையான முறையில் இந்த அக்குள் கருமையை நீக்க சில வழிகளை பார்க்கலாம்.

முதலில் வெள்ளரிக்காயை வெட்டி அதனை தினமும் அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து அக்குளையும் தடவி பத்து நிமிடங்கள் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இதனை தினமும் செய்து வர வித்தியாசத்தை காணலாம்.

உருளைக்கிழங்கினை வெட்டி அதனை அக்குளில் அருமையாக இருக்கும் இடங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் விரைவில் கருமை நீங்கும்.அக்குள் கருமையால் சிரமப்படுகிறீர்களா?..... உங்களுக்கான டிப்ஸ் இதோ!

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து அதனை பொடி செய்து பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்து அதை அக்குளில் தடவி பத்து நிமிடங்கள் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தயிர், எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள் தூள், தேன் ஆகியவற்றை கலந்து அதை அப்படியே அக்குளில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவி பத்து நிமிடங்கள் உலர விட்டு கழுவி வர விரைவில் கருமை மறையும். இதனை தினமும் செய்து வரலாம்.அக்குள் கருமையால் சிரமப்படுகிறீர்களா?..... உங்களுக்கான டிப்ஸ் இதோ!

குறிப்பு:

இந்த முறைகளை எல்லாம் பின்பற்றுவதற்கு முன்பாக சூடான நீரில் காட்டன் துணியை அனைத்து அதனை கருமையாக இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறும். பின்னர் மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் இதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ