spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிரச்சனையா? இதனை ப்ளோ பண்ணுங்க…

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிரச்சனையா? இதனை ப்ளோ பண்ணுங்க…

-

- Advertisement -

உங்களின் அன்பிற்குரியவர்கள் (கணவர், மனைவி, பெற்றோர், நண்பர் அல்லது குழந்தை) மனநலப் பிரச்சனைக்கு ஆளாகியிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது”என்பதை இந்த பதிவில் அறிந்துக் கொள்ளலாம்.உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிரச்சனையா? இதனை ப்ளோ பண்ணுங்க…என்ன செய்யலாம்

நான் உன்னுடன் இருக்கிறேன்

we-r-hiring

உங்கள் அன்புக்குரியவா்கள் இப்பிரச்சனையில் இருக்கும் போது, பேச விரும்புவதை இடையில் குறுக்கிடாமல் பேசவிடுங்கள். நீங்களே தீா்ப்பளிக்காதீா்கள். “நான் உன்னுடன் இருக்கிறேன்”என்ற உணர்வு வருவது மிக முக்கியம் ஒன்றாகும். மேலும், “இதெல்லாம் சிறிய விஷயம், அதற்கு நீ தான் காரணம், “இப்படி நினைக்கக்கூடாது” போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு கூறும் போது அவா்களுக்கு பாதுகாப்பு உணர்வு குறையும்.

உன்னுடன் சேர்ந்து போய்வரலாம்

மனநல நிபுணரை (Psychologist / Psychiatrist) சந்திக்க அழகாக பரிந்துரை செய்யுங்கள். “உன்னுடன் சேர்ந்து போய்வரலாம்”என்று சொல்லுவது அவா்களுக்கு தைரியத்தை தரக்கூடும். குறைந்த அழுத்தம் (stress-free) உடைய சூழல் உருவாக்க வேண்டும். தினசரி நடை, இயற்கைச் சுற்றுலா, இசை, யோகா போன்றவைகளை மேற்கொள்ள உதவுங்கள். மனநல குறைபாடுகள் (உதா: மனச்சோர்வு, கவலை நோய், இரட்டை மனநிலை) பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதனால் அவரை சுலபமாக புரிந்துகொள்ளலாம்.உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிரச்சனையா? இதனை ப்ளோ பண்ணுங்க…என்ன செய்யக்கூடாது

நீயே சோம்பேறி

“நீயே சோம்பேறி என்றும் “எதற்கெல்லாம் கவலைப்படுகிற?” போன்ற சொற்களை உபயோகிக்காதீா்கள். அது அவா்களுக்கு மேலும் மனநலத்தை பாதிக்கும். நீ இப்போ மகிழ்ச்சியாக இருக்கணும்!” போன்ற அழுத்தம் கொடுக்காதீர்கள். அதனால் குணமடைய நேரம் எடுக்கும். “சில நாளில் சரியாகிவிடுவார்”என்று விட்டுவிடாதீர்கள். ஆரம்பத்திலேயே அவா்கள் மீது கவனம் செலுத்துவது மிக முக்கியமான விஷயமாகும்.

உங்களை கவனிக்க மறந்துவிடாதீர்கள்

மனநலப் பிரச்சனை கொண்டவரை ஆதரிக்கும்போது நீங்களும் மனஅழுத்தம் பெறலாம். ஆதரவு குழு (support group) அல்லது ஆலோசனைகளை பெற வேண்டும்.

மனநலம் என்பது உடல் நலத்திற்குச் சமமானது. ஆதரவு, புரிதல், பொறுமை போன்றவைகளே மிகச் சிறந்த மருந்தாகும்.

மழைக்கால வறட்டு இருமலுக்கான 10 சிறந்த தீர்வுகள்!

MUST READ