Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கொழுப்பை கரைக்கும் ப்ரோக்கோலி!

கொழுப்பை கரைக்கும் ப்ரோக்கோலி!

-

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட் பழக்கத்தை பின்பற்றுவார்கள். அதன்படி பச்சை காய்கறிகளில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அது நம் செரிமானத்திற்கும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. உடல் பருமன் என்பது நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருவதால் உண்டாகிறது. எனவே தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் வழிகளை பார்க்கலாம்.கொழுப்பை கரைக்கும் ப்ரோக்கோலி!

அதாவது ப்ரோக்கோலி என்பது கொழுப்புகளை கரைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ப்ரோக்கோலியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ப்ரோக்கோலி என்பது காலிபிளவர் வகையை சார்ந்தவையாகும். ப்ரோக்கோலியில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது முட்டைக்கோஸ் வகையைச் சார்ந்தது. இதில் உள்ள நார்ச்சத்து எளிதில் கரையும் தன்மையுடையது. இது செரிமான பாதைகளை சுத்தப்படுத்துவதில் பெரும் பங்களிக்கிறது.கொழுப்பை கரைக்கும் ப்ரோக்கோலி!
ப்ரோக்கோலியில் கால்சியம் சத்துக்களும் காணப்படுவதால் இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேசமயம் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் பயன்படுகிறது. மேலும் ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இவை மனநலத்தை பராமரிக்க பயன்படுகிறது. கொழுப்பை கரைக்கும் ப்ரோக்கோலி!அத்துடன் இது ஞாபக சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ப்ரோக்கோலி என்பது புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் பயன்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே ப்ரோக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வதும் நல்லது.

MUST READ