ஒரு காலத்தில் கார்டியோ வாஸ்குலர் நோய் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் இப்போது இந்த இதய நோய் நோய் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீப காலமாக அதிக அளவிலான குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
1.பிறவி இதய நோய்
பிறவி இதய நோய் என்பது பிறப்பிலிருந்தே குழந்தைகளை பாதிக்க கூடியது. அதாவது சாதாரண குழந்தைகளை போல பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எடை அதிகரிப்பதில்லை. மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மூச்சுத் திணறல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். தூங்கும் போது அதிகப்படியான வியர்வை வெளியேறுவதும் கூட இந்த நோயின் அறிகுறியாக சொல்லப்படுகிறது.
2.மரபியல் இதய நோய்
குழந்தையின் இதயத்தில் மரபணு காரணிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மரபணு மாற்றங்களால் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.
3.தாமதமான கர்ப்பத்தினால் உண்டாகும் இதய நோய்
இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெரும்பாலானவர்கள் குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக குழந்தை பெறும் தம்பதிகளுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் ஏதேனும் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அதன்படி தான் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறதாம்.
எனவே பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனை கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவது நல்லது.