spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!

செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!

-

- Advertisement -

பொதுவாக செரிமான பிரச்சனைகள் பல காரணங்களால் ஏற்படுகிறது. உணவினை மென்று சாப்பிடாமல், வேகமாக விழுங்குதல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதிகமான எண்ணெய், காரம், உப்பு சார்ந்த உணவு வகைகளாலும், அதிகமான மசாலா உணவுகளாலும் செரிமானம் பாதிக்கப்படும்.செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்! இது தவிர உடல் உழைப்பு இல்லாமல், தண்ணீர் குறைவாக அருந்துதல், குறைவான நார்ச்சத்து, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் செரிமானம் தடைபடும்.

தற்போது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில வழிகளை பார்க்கலாம்.

we-r-hiring

தினமும் பருகும் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வினிகரை சேர்ப்பது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துவதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!

அடுத்தது எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இது அதிக அளவிலான செரிமான நொதிகளை உருவாக்க உதவும். ஆகையினால் தினமும் பருகும் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து குடித்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இது தவிர புதினா இலைகளும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் பித்த ஓட்டம் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும். இது செரிமான நொதிகளை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!

வெள்ளரிக்காயின் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவி புரியும். எனவே வெள்ளரிக்காயை மெல்லியதாக நறுக்கி, தண்ணீரில் சேர்த்து குடித்து வரலாம்.

லவங்கப்பட்டையை தண்ணீரில் சேர்த்தால் செரிமானம் மேம்படுவதோடு, வயிற்றுப் பாதையில் உள்ள நோய் தொற்றுகள் குணமாகும்.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கும். இது செரிமானத்தை சீராக்கவும் உதவும்.செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!

இதைத்தவிர சீரகத் தண்ணீர், வெந்நீர், தேங்காய் நீர் போன்றவைகளும் குடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ