சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி பார்க்கலாம்.
சிறுநீரகங்கள் என்பது உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டும் ஒரு முக்கிய உறுப்பாகும். இது ரத்தத்தை சுத்தமாக்கி, உடலில் இருக்கும் உப்புகள், நீர் சமநிலையை கட்டுப்படுத்தக்கூடியது. எனவே சிறுநீரகங்கள் சீராக செயல்பட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:
அவரைக்காய் சுரைக்காய், பூசணிக்காய், பீன்ஸ், வெந்தயக்கீரை, பசலைக்கீரை ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இது உடலை சுத்தமாக்கி சக்தியை கொடுக்கும். இது தவிர முட்டை வெள்ளை, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், ஓட்ஸ், பார்லி, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவவைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது பசியை கட்டுப்படுத்தி, சிறுநீரகங்களுக்கு அழுத்தம் இல்லாமல் ஜீரணமாக உதவும். அடுத்தது இளநீர் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மட்டுமே தினமும் இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
அதிக உப்புள்ள உணவு வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அதிக புரதம் உள்ள பொருட்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள கூடாது. இது சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது தவிர அதிக அளவில் கோஸ், வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி எடுத்துக்கொள்ள கூடாது. மேலும் நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். அதைவிட அதிகமாக குடிக்கக்கூடாது. தொடர்ந்து உடல் எடையை கண்காணிக்க வேண்டும். சிறுநீரை சீரான முறையில் கழிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.