கிராம்பு, சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
சமையலில் நாம் பயன்படுத்தும் மகத்தான மூலிகைகளில் ஒன்று கிராம்பு. இதில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. தற்போது இது சர்க்கரை நோய்க்கு எப்படி உதவுகிறது என்பதை பார்க்கலாம். கிராம்பு என்பது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள யூஜினால் எனும் பொருள் இன்சுலின் ஹார்மோனின் செயலை தூண்டுகிறது. உணவின் மூலம் ரத்தத்தில் சர்க்கரை விரைவாக சேராமல் மெதுவாக சேர்க்க உதவுகிறது.

கிராம்பு கசாயம் செய்து பருகிவர நல்ல தீர்வு கிடைக்கும்.
கிராம்பு கசாயம் செய்ய மூன்று முதல் நான்கு கிராம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கப் அளவு தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு தேவையான அளவு தேன் கலந்து சூடாக பருக வேண்டும்.
இது தவிர தினமும் காலையில் வெறும் வயிற்றில் கால் ஸ்பூன் அளவு கிராம்பு தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
மேலும் கிராம்பினை குழம்பு, கிரேவி, சாம்பார், பிரியாணி அனைத்திலும் 1 முதல் 2 கிராம்பு சேர்த்தாலே போதுமானது.
குறிப்பு:
நாள் ஒன்றுக்கு நான்கு கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் அமிலம் அதிகரிக்கும், வாயு பிரச்சனை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.