மல்லிப்பூ என்பது தமிழர்களின் கலாச்சாரத்திற்கும், அழகிற்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் உள்ள மணம், மருத்துவ குணங்கள் போன்றவை நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இயற்கையான மணத்தின் மூலம் புத்துணர்ச்சி தரும் இந்த மல்லிப்பூ நம் மன அழுத்தத்தை குறைத்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, நாம் புத்துணர்ச்சியாக இருந்தால் நம் அழகு அதிகரிக்கும்.

மேலும் மல்லிப்பூவின் சாற்றில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் காணப்படுவதால் இது தோலில் உள்ள சுருக்கங்களையும், கருமைகளையும் நீக்க உதவும். எனவே மல்லிப்பூவின் சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும்.
மல்லிப்பூ எண்ணெய், தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இதனால் கூடுதல் அழகு கிடைக்கும்.
மன அழுத்தத்தாலும், தூக்கமின்மை பிரச்சனையாலும் அவதிப்படுபவர்கள் மல்லிப்பூவை அருகில் வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் கிடைக்குமாம். இதனால் இயற்கையிலேயே உடலுக்கு இரட்டிப்பு பளபளப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்தது மல்லிப்பூவில் உள்ள மணம் வியர்வை நாற்றத்தை மறைத்து இயற்கையான வாசனை திரவியம் போன்று செயல்படும்.
மல்லிப்பூ தேநீர் குடிப்பது செரிமானத்தை சீராக்கும்.
இது தவிர மல்லிப்பூ உலர்ந்து விட்டால் அதனை தூக்கி எறியாமல் அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை, நான்கு துண்டு ஆப்பிள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி வர முகம் குளிர்ச்சியாகி, மென்மையாகி ஜொலிக்க தொடங்கும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.