Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?.... இதை மட்டும் பண்ணுங்க!

உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?…. இதை மட்டும் பண்ணுங்க!

-

- Advertisement -

ஹீமோகுளோபின் என்பது ஆண் – பெண் இரு பாலருக்கும் முக்கியமானது. ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் சோர்வு, மூச்சு திணறல், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். இதைதான் அனிமியா என்று சொல்வர்.உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?.... இதை மட்டும் பண்ணுங்க!

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் என அனைவரும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்காக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி முருங்கைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?.... இதை மட்டும் பண்ணுங்க! இது தவிர பயறு வகைகள், பட்டாணி, பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் பீட்ரூட் எடுத்துக் கொண்டால் நல்லது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு பீட்ரூட்டை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பால், தயிர், முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் சோளம், கம்பு, சாமை, வரகு, ராகி, குதிரைவாலி போன்ற தானிய வகைகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது தவிர வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகிய பழ வகைகளை சாப்பிட வேண்டும். அடுத்தது தண்ணீர் என்பதும் ஹீமோகுளோபின் செயல்பாட்டுக்கு அவசியமானது. எனவே அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?.... இதை மட்டும் பண்ணுங்க!

இதையெல்லாம் விட அதிக அளவில் காபி, டீ குடிக்கக்கூடாது. அதிகமான எண்ணெய் உணவுகளையும், கார உணவுகளையும், உப்பு உள்ள உணவுகளையும், சூடான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் ஹீமோகுளோபின் குறைய காரணமாக அமையும். ஆகையினால் மேற்குறிப்பிட்ட வழிவகைகளை முறையாக பின்பற்றினால் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ