அன்னாசி பழம் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும்.
அந்த வகையில் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும் இது ஜீரணத்திற்கும் உதவக்கூடியது. அன்னாசி பழசாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் காணப்படுவதால் இது எளிதில் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அடுத்தது ஒரு நாளைக்கு தேவையான மாங்கனிஸ் உப்பு அன்னாசி பழத்திலிருந்து கிடைக்கும். இதை எலும்புகள் மற்றும் நரம்புகளின் சுறுசுறுப்பிற்கு உதவுகிறது.
இது தவிர அன்னாசி பழமானது மன அழுத்தத்தை குறைத்து, புத்துணர்ச்சியை தரும்.
மூட்டு வலி, வீக்கம் உடையவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மேலும் அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலை தடுக்கும். அதுமட்டுமில்லாமல் இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வயிற்றுப் புண்கள் குணமாக அன்னாசி பழம் உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க அன்னாசி பழச்சாறு உதவுகிறது. எனவே பெண்கள் மாதவிடாய் முடிந்ததும் அன்னாசி பழத்தினை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு அன்னாசி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் வாயு, எரிச்சல் ஆகியவை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.