சப்போட்டாவில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பல நற்குணங்கள் இருக்கிறது.
சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண் நரம்புகளையும், ரெட்டினாவையும் பாதுகாக்கும். இது இரவில் தெளிவாக பார்ப்பதற்கு உதவி புரியும். அடுத்தது இதில் உள்ள வைட்டமின் சி, கண் செல்களை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸில் இருந்து பாதுகாக்கும். மேலும் வயது சார்ந்த கண் மங்கல், மக்குலர் டிஜெனரேஷன் ஆகியவற்றை தாமதப்படுத்தும்.

சப்போட்டாவில் லூட்டின் மற்றும் ஜியாக்ஸாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் இருக்கிறது. இது வயது மூப்பு காலத்தில் பார்வை குறைபாடு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
இதில் உள்ள இரும்பு மற்றும் கனிமங்கள், கண் நரம்புகளுக்கு ஆக்சிஜன் மட்டுமில்லாமல் சத்துக்களையும் வழங்குகிறது. இதனால் பார்வை திறன் அதிகரிக்கிறது.

சப்போட்டா பழத்தில் இயற்கையான ஈரப்பதம் இருப்பதனாலும், நார்ச்சத்து இருப்பதாலும் கண்களில் உலர்வு ஏற்படுவது குறையும்.
எனவே கூர்மையான கண்பார்வைக்கு தொடர்ந்து சப்போட்டா பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவும். இருப்பினும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சப்போட்டா பழத்தை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


