Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!

மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!

-

நம் முன்னோர்கள் காலத்தில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். அதுவே அவர்களுக்கு போதுமான அளவு உடல் உழைப்பை தருவதால் எந்தவித நோயும் அண்டாமல் இருந்தது. மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!ஆனால் இன்று துணி துவைப்பதற்கு வாஷிங் மிஷின், பாத்திரம் தேய்ப்பதற்கு ஒரு மிஷின் என டெக்னாலஜி வளர்ந்து கொண்டே செல்வதால் நாம் அனைவரும் சோம்பேறி ஆகிவிட்டோம். வீட்டில் சமைப்பதற்கு தேவையான மசாலா பொருட்கள் மாவு பொருட்களை கூட நம் வீட்டில் அரைப்பதில்லை. அந்த அளவிற்கு நாம் அவசர காலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதனால் சிலருக்கு உடல் பருமன், இளம் வயதிலேயே மாரடைப்பு, இதயம் தொடர்பான பிரச்சனை, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உண்டாகிறது.மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!அதிலும் இந்த சர்க்கரை நோயினால் 100க்கு 70% பேர் பாதிப்படைகின்றனர். உணவே மருந்து என்பது மாறி மருந்தே உணவு என்றாகிவிட்டது. இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்த சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. அதிலும் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாடு தான். சர்க்கரை நோய்க்காக வாழ்நாள் முழுவதும் மாத்திரை போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது மாத்திரை இல்லாமல் நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வழிகளை பார்க்கலாம்.

1. தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
2. கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்
3. கட்டாயம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!

4. தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.
5. போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.
6. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மனதை ஒருநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்
7. வாரந்தோறும் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிகள்!

8. ரத்தத்தின் சர்க்கரை அளவையும் தவறாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
9. லவங்கப்பட்டை, வெந்தயம் போன்றவை ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
10. நாள் ஒன்றுக்கு மூன்று முறையாவது கிரீன் டீ அல்லது பிளாக் டீ உட்கொள்ளலாம்.
11. துரித உணவுகளை தவிர்த்து குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
12. குறைந்த அளவிலான கிளைசெமிக் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இம்முறைகளை எல்லாம் பின்பற்றினாலே நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இருப்பினும் அடிக்கடி மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ