spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்.... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

-

- Advertisement -

மனிதர்களை அமைதியாக கொல்லக்கூடிய கொடிய வகை நோய்கள் குறித்தும் அவற்றின் அறிகுறிகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்.... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

பொதுவாக மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் ஒரு சில அறிகுறிகளுடன் தென்படும். ஆனால் சில நோய்கள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உண்டாகும். இதனால் அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாக மாறிவிடும். எனவே அந்த நோய்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் விரைவில் அதற்கு சிகிச்சை பெற்று அதிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

we-r-hiring

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்திற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. அதாவது மூக்கில், ரத்தப்போக்கு, மூச்சுத் திணறல், மார்பு வலி, தலைவலி, தலைசுற்றல் போன்றவை அதற்கான அறிகுறிகளில் அடங்கும். ஆகையினால் அடிக்கடி இரத்த அழுத்த அளவை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்.... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நீரிழிவு நோய்

அடுத்தது நீரிழிவு நோய். அதிகமான தாகம். அதிகமான பசி. அடிக்கடி சிறுநீர் கழித்தல். சோர்வாக உணர்தல் போன்றவை நீரழிவு நோயின் அறிகுறிகள் ஆகும். இதனால் எடை இழப்பும், தசை மெலிதலும்,மங்கலான பார்வையும் உண்டாகக்கூடும். ஆகையினால் அடிக்கடி மருத்துவரிடம் சென்று ரத்தத்தில் குளுக்கோஸில் அளவை பரிசோதித்துக் கொள்வதில் நல்லது.

கணைய புற்று நோய்

கணைய புற்றுநோய் என்பது புற்று நோய்களை விடவும் அதிகமான இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. மனிதனை அமைதியாக கொல்லும் கொடிய நோய்கள்.... எச்சரிக்கும் மருத்துவர்கள்!இந்த கணைய புற்றுநோயினால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்ற புற்றுநோய்கள் ஆரம்பத்தில் அறிவுரைகளை ஏற்படுத்தாது. இருப்பினும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. மஞ்சள் காமாலை
2. தோல் அரிப்பு
3. அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
4. பசியின்மை
5. உடல் எடை இழப்பு
6. மலச்சிக்கல்
7. வயிற்றுப்போக்கு
8. மலத்தில் ஏற்படும் சில மாற்றங்கள்
ஆகியவை கணைய புற்றுநோய் தொடர்புடைய அறிகுறிகள் ஆகும். எனவே இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

MUST READ