Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!

உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!

-

- Advertisement -

நாம் அனைவரும் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியாக பராமரித்து வருகிறோம். அதில் தற்போது உதட்டை பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

1. உதடு சிவப்பாக மாற பீட்ரூட் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை உதடுகளின் மேல் தடவி வர உதடு விரைவில் சிவப்பாக மாறும்.உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!

2. பனிக்காலங்களில் உதடுகள் வறண்டு உதடு வெடிப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய முதலில் கரும்பு சக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு சரியாகும்.

3. உதட்டின் மேல் உள்ள கருமை நீங்குவதற்கு இரண்டு ஸ்பூன் அளவில் கேரட் ஜூஸ் எடுத்து, அதனை காட்டன் துணையால் தொட்டு உதட்டின் மேல் தடவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும். காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி சிகப்பாக மாறும்.

4. உதடுகளில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்க, உலர்ந்த திராட்சை ஒன்றை எடுத்து உதடுகளுக்கு மேல் வைத்து விரல்களால் அப்படியே மசாஜ் செய்யவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் உதடுகளில் உண்டாகும் சுருக்கங்கள் குறையும். வயதானால் கூட இந்த சுருக்கங்கள் தெரியாது.உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!

5. உதடுகள் மென்மையாக, வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் குறைந்து உதடுகள் மென்மையாகும்.

6. உதடு வழவழப்பாக இருக்க, ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு சர்க்கரை கலந்து ஸ்கரப் போன்று பயன்படுத்தி வந்தால் உதடு வழவழப்பாக மாறிவிடும்.

MUST READ