சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் குறையாமல் தடுக்க சில வழிகளை பார்க்கலாம்.
முதலில் காய்கறிகளை கழுவி நறுக்க வேண்டும். நறுக்கி கழுவ கூடாது.
அடுத்தது காய்கறிகளை ஊற வைக்கும் அல்லது கழுவும் நேரத்தை குறைப்பதன் மூலம் அதன் சத்து வீணாகாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் காய்கறிகளை சிறிது சிறிதாக வெட்டாமல் பெரிய துண்டுகளாக வெட்டுவதன் மூலம் கழுகும்போதும் சமைக்கும்போதும் அதில் உள்ள சத்துக்கள் குறைவது தடுக்கப்படும்.
பின்னர் தோல் சீவி கருவியை பயன்படுத்தி மேற்தோலை மட்டும் நீக்குவதனால் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் குறைவதில்லை. ஆனால் அதை அழுத்தமாக சீவுவதன் காரணமாக அதில் உள்ள சத்துக்கள் வீணாகும்.
அடுத்தது காய்கறிகளை வேக வைக்கும் போது தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் காய்கறிகளை சேர்க்க வேண்டும். அதே சமயம் காய்கறிகளை ஆவியில் வேக வைத்தால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.
சமைத்தலின் போது சமையல் சோடாவை பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது. சாலட் போன்றவைகளை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தயாரிப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் தடுக்கலாம். அதே சமயம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் ஆகியவற்றை சாலட் தயாரிப்பின் போது சேர்ப்பதன் மூலம் உயிர்சத்துக்களின் இழப்பு தடுக்கப்படும்.
இதுபோன்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க சத்துக்கள் குறையாமல் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.