Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்டீக்கு பிஸ்கட் வச்சி சாப்பிடுறீங்களா?.... அப்போ இது உங்களுக்காக தான்!

டீக்கு பிஸ்கட் வச்சி சாப்பிடுறீங்களா?…. அப்போ இது உங்களுக்காக தான்!

-

இன்றுள்ள அவசர காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் காலை உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள். அதற்கு பதிலாக டீ/காபி– வடை அல்லது டீ/காபி
– பிஸ்கட் போன்றவைகளை சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். டீக்கு பிஸ்கட் வச்சி சாப்பிடுறீங்களா?.... அப்போ இது உங்களுக்காக தான்!குறிப்பாக டீ என்பது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் டீக்கு அடிமையானவர்கள் அதிகம். அந்த டீயை குடித்தால் தான் வேலையே ஓடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதால் பல பிரச்சினைகள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டீ மற்றும் பிஸ்கட்டில் அதிக அளவு சர்க்கரை இருப்பதனால் இது இன்சுலின் உறிஞ்சுதலை தடுக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக இன்சுலின் ஹார்மோன் சமநிலை இன்மையால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.டீக்கு பிஸ்கட் வச்சி சாப்பிடுறீங்களா?.... அப்போ இது உங்களுக்காக தான்! இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவது செரிமான பிரச்சனையை உண்டாக்குமாம். அத்துடன் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வழிவகுக்குமாம். மேலும் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு இதய பிரச்சினைகள் உண்டாகும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அடிக்கடி டீ – பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக புரதச்சத்து, நீர்ச்சத்து உள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இருப்பினும் 30 வயதிற்கு மேலானவர்கள் அடிக்கடி ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

MUST READ