ஆண், பெண் இருபாலருக்கும் தொப்பை என்பது பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு சிலர் கடினமாக உடற்பயிற்சி செய்வதனால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர். ஆனால் பலர் உடல் எடை அதிகமான பின் அதை குறைக்க பல முயற்சிகளை எடுத்தாலும் அது பெரிய அளவில் கை கொடுப்பதில்லை. இந்நிலையில் தான் ஒரே ஒரு ஜூஸ் மட்டும் குடிச்சு பாருங்க. அதுக்கப்புறம் தொப்பையை காணோம்னு தேடுவீங்க!
அதாவது சுரைக்காயில் அதிகமான நீர்ச்சத்து இருக்கிறது. நீர்ச்சத்து மட்டுமில்லாமல் சுண்ணாம்புச்சத்து, இரும்பு சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் அடங்கி இருக்கின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. எனவே காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரக்காய் ஜூஸ் குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். அதிலும் குறிப்பாக வயிற்றை சுற்றி காணப்படும் கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைவதை நீங்கள் சில நாட்களிலேயே காணலாம். அதன்படி தொடர்ந்து 14 நாட்கள் இந்த சுரைக்காய் ஜூஸை குடித்து வரவேண்டும்.

இது தவிர பித்தம், வாதம், கபம் போன்ற பல பிரச்சனைகளுக்கு சுரைக்காய் தீர்வாக விளங்குகிறது. அத்துடன் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கல்லீரல் அழற்சி பிரச்சனையை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைப்பதோடு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த சுரைக்காய் உதவுகிறது. எனவே நீங்களும் தினமும் சுரைக்காய் ஜூஸ் குடிங்க. ஸ்லிம்மா மாறுங்க.