spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?..... டிப்ஸ் இதோ!

10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?….. டிப்ஸ் இதோ!

-

- Advertisement -

10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?..... டிப்ஸ் இதோ!நம்மில் பலருக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதை எல்லோராலும் பின்பற்ற முடிவதில்லை. சமயம் இந்த உடல் எடை அதிகரிப்பதினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. பெண்களுக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதே சமயம் 40 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் மாரடைப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சில வழிமுறைகளை பின்பற்றினால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க, இரண்டு ஸ்பூன் அளவு கருஞ்சீரகத்தை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் அந்த தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர விரைவில் உடல் எடை குறைவதை பார்க்கலாம். இம்முறையை கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டாம்.10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?..... டிப்ஸ் இதோ!

we-r-hiring

சர்க்கரை சாப்பிடுவதையும் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதேசமயம் வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைய, கொய்யா இலைகளை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அந்த தண்ணீரை சாப்பிடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் குடித்து வந்தால் வித்தியாசத்தை காணலாம்.

விதைகளை நீக்கிய ஐந்து பெரிய நெல்லிக்காய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு, சிறிதளவு இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி அதில் கிடைக்கும் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.10 நாட்களில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா?..... டிப்ஸ் இதோ!

குறிப்பு:

இம்முறைகளை எல்லாம் பின்பற்றுவதுடன் தினமும் அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.

மேலும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ