Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

-

- Advertisement -

பொதுவாகவே பெண் பிள்ளைகள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பலவகையான நோய்வாய்ப்பிலிருந்து தப்பிக்க உதவியாக இருக்கும். அந்த வகையில் பெண் பிள்ளைகள் முட்டை, பருப்பு வகைகள், மீன், முருங்கை போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

அடுத்தது பெண் பிள்ளைகளில் இரும்புச் சத்து குறைபாடு சாதாரணமானதாக இருக்கிறது. இதனால் ஹீமோகுளோபின் பாதிக்கப்படுகிறது. எனவேதான் பெண் பிள்ளைகளுக்கு ஒரு வயதில் இருந்து உளுந்து, ராகி போன்றவற்றை கொடுத்து பழக்க வேண்டும். அதேபோல் கேரட், பீட்ரூட், பட்டாணி சுரைக்காய், முருங்கைக்கீரை போன்றவைகளும் இரும்புச்சத்து அதிகரிக்க உதவுகிறது.

எலும்பு வளர்ச்சி என்பது பெண் பிள்ளைகளுக்கு அவசியமான ஒன்று. ஏனென்றால் பெண் பிள்ளைகள் வளரும் பருவத்தில் கர்ப்பம், பிரசவம் போன்றவகளை கடந்து வர வேண்டி இருக்கிறது. இதற்கு எலும்புகள் வலிமையாக இருந்தால் தான் அவர்களால் இதையெல்லாம் தாங்க முடியும். எனவே பசும்பால், தயிர், பன்னீர், முந்திரிப் பருப்பு, நெய் போன்றவைகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி என்பதும் மிகவும் அவசியம்.பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

வால்நட், கேரட் பூசணிக்காய், ஓமம், நாட்டு அரிசி வகைகள், மக்காச்சோளம் போன்றவைகளின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

ஹார்மோன்களின் சமநிலை என்பது பெண் பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. இது பூப்படைதல் வளர்ச்சிக்கு முக்கியம். அதன்படி கொண்டைக்கடலை, அவகேடோ, சோயா, வெள்ளரி விதை போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

துளசி, வெந்தயம், பனைவெல்லம், நாட்டு சக்கரை, மஞ்சள் பால் போன்றவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் (ஸ்னாக்ஸ்), காபி, டீ, அதிக அளவு சர்க்கரை, ஃபாஸ்ட் ஃபுட் போன்றவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது எதிர்காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு PCOD, PCOS போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஆதலால் பெண்பிள்ளைகள், ஒவ்வொரு உணவு வகைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ