பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கே, பி1, பி2, பி3, ஈ போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த படம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் அதிகரிக்கும். பிளம்ஸ் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க இந்த பிளம்ஸ் பழம் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும் இது பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆக்சிஜனேற்றங்கள் உடலில் உள்ள செல்களை ப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
இது தவிர பிளம்ஸ், தோல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நீரை வெளியேற்றவும் பிளம்ஸ் உதவுகிறது.
எனவே நீங்களும் தவறாமல் பிளம்ஸ் பழத்தை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த பழத்தை காலை மற்றும் மதிய வேலைகளில் ஸ்நாக் போல எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


