Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!

இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!

-

குடைமிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!

குடைமிளகாய் – 2
வெங்காயம் – 2
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

குடைமிளகாய் சட்னி செய்ய முதலில் குடைமிளகாயை தீயில் சுட்டு அதன் மேல் தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உள்ளிருக்கும் விதைகளையும் நீக்கிவிட வேண்டும்.

இப்போது உப்பு, புளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்ததாக வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அதன் பின் அரைத்து வைத்துள்ள பொழுதை சேர்த்து கிளறி விட்டு இறக்க வேண்டும். குடைமிளகாய் சட்னி தயார்.இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!குடைமிளகாயில் வைட்டமின் சி, தாது உப்புக்கள் போன்றவை காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்களும் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆகவே தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக குடைமிளகாய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். குறிப்பாக பெண்கள் இந்த குடைமிளகாயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

MUST READ