Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

-

கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

நறுக்கிய தேங்காய் – 1 கப்
பச்சரிசி – 3 ஸ்பூன்
வெல்லம் அல்லது சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய் – 2
முந்திரி – 15
பால் – கால் கப்
நெய் – 50 கிராம்

செய்முறை:

தேங்காய் பாயாசம் செய்ய முதலில் கால் கப் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

இப்போது பச்சரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த பச்சரிசியை தேங்காயுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்த அரிசி மற்றும் தேங்காய் கலவையை ரெண்டு கப் தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதே சமயம் கைவிடாமல் கிளறியும் விட வேண்டும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, அத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய வைக்க வேண்டும். இப்போது வெல்லும் கரைந்த பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் வெந்து வரும் அரிசியில் வெல்லம் கரைசலை சேர்க்க வேண்டும். சர்க்கரையாக இருந்தால் அதனை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

பின் தட்டி வைத்துள்ள ஏலக்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதே சமயம் மற்றுமொரு பாத்திரத்தில் 50 கிராம் அளவு நெய் சேர்த்து நெய் காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது தயாராகி வரும் பாயாசத்தில் நெய் மற்றும் வறுத்த முந்திரிகளை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக காய்ச்சிய பாலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.கல்யாண வீட்டு தேங்காய் பாயாசம் செய்யலாம் வாங்க!

இப்போது அருமையான தேங்காய் பாயாசம் தயார்.

MUST READ