Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் செய்வது எப்படி?

-

- Advertisement -

மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் செய்வது எப்படி?

ஃபிஷ் பால்ஸ் செய்வதற்கு முதலில் விருப்பப்பட்ட மீனை 250 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆவியில் வேகவைத்து, வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மீனை மாற்றி (முள் இல்லாமல்), வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சீரகத்தூள், முட்டையில் வெள்ளை கரு, கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். (தேவைப்பட்டால் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்)

இப்போது சம அளவு உருண்டைகளாக உருவாக்கி அந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். தயாரான இந்த ஃபிஷ் உருண்டைகளை சட்னி அல்லது சாஷுடன் பரிமாறலாம்.குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் செய்வது எப்படி?

மீனில் அதிகப்படியான புரதம் இருப்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஃபிஷ் உருண்டைகளை சாப்பிடலாம்.

குறிப்பு: 1. மீனில் அதிக அளவில் ஈரப்பதம் இருந்தால் கடலை மாவு அல்லது ரவை இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

2. சீலா, வஞ்சிரம் போன்ற எலும்புகள் குறைந்த மீன்களை தேர்ந்தெடுத்தால் நல்லது.

3.வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள் போன்றவற்றை தேவைக்கேற்ப கூட, குறைய சேர்த்துக் கொள்ளலாம்.

MUST READ