வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?
வேர்க்கடலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – அரை கப்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
தேங்காய் துருவல் – அரை கப்
வடித்த சாதம் – 200 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
வேர்க்கடலை சாதம் செய்ய முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதே கடாயில் தேவையான அளவு (4 ஸ்பூன் வரை) எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும். எண்ணெயில் அந்த பவுடர் நன்கு கலந்த பின் வடித்த சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விட வேண்டும்.
அருமையான ஈஸியான வேர்க்கடலை சாதம் தயார்.
வேர்க்கடலை ஆரோக்கியமானது என்பதால் உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கலாம். மேலும் அவித்த முட்டை அல்லது அப்பளம் இதற்கு பொருத்தமான சைடிஷாக இருக்கும்.