Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வேலைக்கு போறீங்களா..... அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு!

வேலைக்கு போறீங்களா….. அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு!

-

அப்பளக் குழம்பு செய்வது எப்படி?

அப்பளக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:வேலைக்கு போறீங்களா..... அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு!

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
அப்பளம் ( உளுந்து அப்பளம்) – 2
வர மிளகாய் – 1
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
கடுகு- கால் ஸ்பூன்
கடலைப்பருப்பு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அப்பளத்தை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இப்போது சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, வெந்தயம் ஆகியவற்றுடன் வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது தேவையான அளவு சாம்பார் பவுடரை சேர்த்து வதக்கி விட வேண்டும். அத்துடன் ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி சேர்க்க வேண்டும்.வேலைக்கு போறீங்களா..... அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு! தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் சேர்த்த பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். மசாலா வாசனை போன பிறகு பொரித்து வைத்திருக்கும் அப்பளத்தை நான்கு துண்டுகளாக உடைத்து குழம்பில் சேர்க்க வேண்டும்.

இப்போது அருமையான அப்பளக் குழம்பு தயார்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த குழம்பை வெறும் பத்து நிமிடங்களில் தயார் செய்யலாம். எனவே நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ