Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தினமும் பருப்பு சாப்பிடுறீங்களா..... அப்போ இது உங்களுக்கு தான்!

தினமும் பருப்பு சாப்பிடுறீங்களா….. அப்போ இது உங்களுக்கு தான்!

-

நாம் அன்றாட உணவில் சேர்க்கும் பருப்பு வகைகளில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் துவரம் பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இது நம் ரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் பருப்பு சாப்பிடுறீங்களா..... அப்போ இது உங்களுக்கு தான்!மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கடலைப்பருப்பு சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இது தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுபோல பாசிப்பருப்பினை அதிகம் சேர்த்துக் கொள்வதால் நம் நினைவாற்றல் அதிகரிக்கும். சருமத்தின் அழகு கூடும்.

இவ்வாறு பருப்பு வகைகளில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இதனை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதாவது தினமும் நாம் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இது நம் செரிமான அமைப்பை சீர்குலைக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் போன்றவை பருப்பு வகைகளை காணப்படுகின்றன. தினமும் பருப்பு சாப்பிடுறீங்களா..... அப்போ இது உங்களுக்கு தான்!எனவே இதனை தினமும் உட்கொள்ளும்போது நம் எடை அதிகமாகிறது. இதன் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் உண்டாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.

இருப்பினும் பருப்பு வகைகளை சாப்பிடும்போது ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ