spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடிக்கிற வெயிலுக்கு கூலான மாம்பழ லஸ்ஸி குடிங்க!

அடிக்கிற வெயிலுக்கு கூலான மாம்பழ லஸ்ஸி குடிங்க!

-

- Advertisement -

மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி?

மாம்பழ லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்அடிக்கிற வெயிலுக்கு கூலான மாம்பழ லஸ்ஸி குடிங்க!

we-r-hiring

மாம்பழம் – பாதி அளவு
குளிர்ந்த தயிர்- கால் கப்
தண்ணீர் – கால் கப்
சர்க்கரை – 4 ஸ்பூன்
மாம்பழ எசன்ஸ் – 2 துளி
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
பாதம், முந்திரி மற்றும் பிஸ்தா – தேவையான அளவு

செய்முறை

மாம்பழ லஸ்ஸி செய்ய முதலில் மாம்பழத்தை அதன் தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக குளிர்ந்த தயிர், தண்ணீர், சர்க்கரை, மாம்பழ எசன்ஸ், மாம்பழம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். நன்கு விழுது போல் வந்ததும் அதை அப்படியே டம்ளருக்கு மாற்றி பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றால் அலங்கரித்து ஜில்லுனு பரிமாறலாம்.

ஐஸ் கட்டிகள் தேவை என்றால் இரண்டு அல்லது மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.அடிக்கிற வெயிலுக்கு கூலான மாம்பழ லஸ்ஸி குடிங்க!

கூலான மாம்பழ லஸ்ஸி தயார். அடிக்கிற வெயிலுக்கு நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இவை செரிமானத்தை எளிதாக்குகின்றன. எனவே முக்கனிகளில் ஒன்றாக விளங்கும் இந்த மாம்பழத்தை சாப்பிடுவதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

MUST READ