Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ராகி குலுக்கு ரொட்டி செய்வது எப்படி?

ராகி குலுக்கு ரொட்டி செய்வது எப்படி?

-

ராகி குலுக்கு ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்
வெல்லம் – அரை கப்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
ஏலக்காய் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவுராகி குலுக்கு ரொட்டி செய்வது எப்படி?

செய்முறை:

ராகி குலுக்கு ரொட்டி செய்ய முதலில் வெல்லத்தைப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் ஏலக்காயை தூளாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் வேர்க்கடலையை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கேழ்வரகு மாவையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உப்பு மற்றும் பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

பின்னர் இந்த மாவினை அடைகளாகத் தட்டி தோசை கல்லில் போட்டு நெய் ஊற்றி இருபுறமும் வெந்து வரும் வரை வேகவிட்டு எடுக்க வேண்டும்.

பின்பு இதனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து பொடித்து வைத்துள்ள வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பின் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.ராகி குலுக்கு ரொட்டி செய்வது எப்படி?

இப்போது இதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கேழ்வரகு ரொட்டிகளை சேர்த்து பரிமாற வேண்டும்.

கேழ்வரகு என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உடையது. இதில் கால்சியம் சத்துக்களும் இருப்பதால் எலும்புகள் வலுப்பெறும் எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம்.

MUST READ