சுவையான மூசுக்கை அடை செய்ய தேவையான பொருட்கள்:
சாமை அரிசி மாவு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – சிறிதளவு
முசுக்கை இலைகள் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முசுக்கை அடை செய்ய முதலில் முசுக்கை இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முசுக்கை இலைகளையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது இந்த கலவையை சாமை அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதனை அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு சூடான தோசை கல்லில் மந்தமாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முசுக்கை அடை தயார். இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமான சைடிஷாக இருக்கும். இதை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.


