Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குழந்தைகளுக்கு இந்த மாதிரி பீட்சா தோசை செஞ்சு கொடுங்க!

குழந்தைகளுக்கு இந்த மாதிரி பீட்சா தோசை செஞ்சு கொடுங்க!

-

பீட்சா தோசை செய்ய தேவையான பொருட்கள்:

தோசை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
குடைமிளகாய் – 2
தக்காளி – 2
காளான் – 4
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
துருவிய சீஸ் – 3 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்குழந்தைகளுக்கு இந்த மாதிரி பீட்சா தோசை செஞ்சு கொடுங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதேசமயம் வெங்காயம் குடைமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் வைத்திருக்கும் கடாயில் நறுக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி சூடான பின் ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றி பரப்பி விட வேண்டும். அதன் பிறகு தோசை அரைவேக்காடு அளவு வெந்ததும் அதன் மேற்பரப்பில் ஒரு ஸ்பூன் அளவு தக்காளி சாஸ் ஊற்றி பரப்பி விட வேண்டும்.

இந்த சமயத்தில் வதக்கிய காய்கறிகளை தோசை மீது ஆங்காங்கே தூங்கி விட வேண்டும். அதன் பிறகு துருவிய சீஸையும் பரப்பி விட வேண்டும்.குழந்தைகளுக்கு இந்த மாதிரி பீட்சா தோசை செஞ்சு கொடுங்க!

இப்போது ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். சீஸ் நன்றாக உருகி வரும் அந்த சமயத்தில் பீட்சா தோசையை அப்படியே எடுத்து தட்டில் வைத்து சூடாக பரிமாறலாம்.

அருமையான பீட்சா தோசை தயார்.

MUST READ