Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்.... எப்படி பயன்படுத்துவது?

முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்…. எப்படி பயன்படுத்துவது?

-

நாம் சமையலறையில் பயன்படுத்தும் ஜாதிக்காய் முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது. அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

1. முகம், கண்ணம், மூக்கு ஆகிய இடங்களில் கருமை நிறத் திட்டுக்கள் காணப்படும். இவற்றை சரி செய்ய ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து, சந்தனம் ஆகியவற்றை தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகத்தில் கருமையான திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வாரத்தில் மூன்று தடவை இம்முறையை கையாண்டால் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறையும்.முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்.... எப்படி பயன்படுத்துவது?

2. ஜாதிக்காய், லவங்கம், மாசிக்காய் ஆகிய மூன்றையும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு முறை இந்த பொடியை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

3. ஜாதிக்காயை சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து அந்த பேஸ்ட்டினை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளி மறைய வாய்ப்புகள் அதிகம்.

4. ஜாதிக்காயை பொடி செய்து அதனுடன் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கிவிடும்.

5. முகம் பொலிவடைய ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடம் காய வைத்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

6. முகத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி போன்றவற்றை சரி செய்ய ஜாதிக்காயை பொடி செய்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தேய்த்து வர வேண்டும்.முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்.... எப்படி பயன்படுத்துவது?

7. ஜாதிக்காய் பொடியுடன் தேன் கலந்து கருவளையம் இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.

இந்த முறைகளை பயன்படுத்திப் பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ