spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பது சாத்தியமா?

ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பது சாத்தியமா?

-

- Advertisement -

உடல் எடை என்பது ஒவ்வொரு மனிதரின் ஆரோக்கியத்தையும், வாழ்வியலையும் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று. உடல் எடையை பராமரிப்பதன் மூலம் பல வகையான நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பது சாத்தியமா? அதற்கு தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தல் அவசியம். ஆனால் இன்றுள்ள பலருக்கும் அதற்கான நேரமே கிடைப்பதில்லை. ஆகையினால் எண்ணெய் சார்ந்த உணவுகள், இனிப்பு வகை உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகியவைகளை குறைத்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதற்காக உடல் எடை மிகவும் குறைவாக இருந்தாலும் அதுவும் உடல்நலத்தை பாதிக்கும். எனவே உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும். அதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு அதனை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது தவிர மூன்று வேளைகளும் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த சீரக தண்ணீரை குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்படும். உணவின் மீதான நாட்டம் குறையும். மட மடன்னு உடல் எடை குறைய இந்த ஒன்னு போதும்!அது மட்டும் இல்லாமல் சீரக நீரை தினமும் உட்கொள்வதனால் பல நோய்களின் அபாயம் குறைவதாக சொல்லப்படுகிறது. எனவே சீரக நீரை தினமும் எடுத்துக் கொள்வதனால் உடல் எடை குறையும் என உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.

we-r-hiring

அதிக அளவிலான உடல் எடை இருப்பவர்கள் உணவு கட்டுப்பாடுகளுடன் சீரக தண்ணீரை உட்கொண்டால் ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ