Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

-

- Advertisement -

புகைப்பிடித்தல் என்பது புற்றுநோயை உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அது தெரிந்தே பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்! புகைப்பிடித்தல் என்பது வாழ்நாளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும். அதாவது நம் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகளை குறைத்து விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புற்றுநோய் மட்டுமல்லாமல் நரம்பியல் தொடர்பான பிரச்சனை, இதய நோய்கள் போன்ற தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கும். புகைப்பிடித்தலால் ஏற்படும் புற்றுநோய் என்பது தொண்டை, சிறுநீரகம், மலம் கழிக்கும் உறுப்பு, நுரையீரல் ஏற்படும். இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!மூச்சுத் திணறல், நுரையீரல் செயல் இழப்பு, வயதான தோற்றம், முடி உதிர்தல், வாழ்நாள் குறைவு போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள் இந்த புகைபிடித்தலால் ஏற்படுகிறது. ஆனால் பலராலும் திடீரென்று இந்த பழக்கத்தை கைவிட முடிவதில்லை. இதற்கான எளிய வழிகளை பார்க்கலாம். முதலில் புகைபிடித்தலை நிறுத்துவதற்காக மனதளவில் தயாராக வேண்டும். புகை பிடிக்காத வாழ்க்கையில் உள்ள நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!நம்மால் இதை விட்டுவிட முடியும் என்று தயாராக வேண்டும். மெது மெதுவாக இந்த பழக்கத்தை கைவிடலாம். தினமும் புகைபிடித்தலின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இருப்பினும் மெது மெதுவாக குறைப்பதை விட திடீரென்று மொத்தமாக குறைத்து விடுவது மிகவும் சிறந்தது. இனி புகைப்பிடித்தல் கூடாது என்று உறுதியாக இருக்க வேண்டும். இது தவிர புகை பிடிக்க விரும்பும் நேரத்தில் பப்பாளி குச்சி, முளிமரங்குச்சில் போன்றவற்றை வாயில் வைத்து பழகலாம்.இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

புகைப்பிடிக்க வேண்டாம் என்று தீர்மானித்தால் புகை பிடிக்கும் நபர்கள் இருக்கும் இடத்தினை தவிர்க்க வேண்டும். அதிகமாக புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் நேரத்தில் அதற்கு மாற்றாக தண்ணீர் குடிக்கலாம், ஜூஸ் வகைகள் , பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர எலுமிச்சை சாறு, புதினா கைகளை வாயில் போட்டு வெல்லலாம். புகைப்பிடிக்கும் எண்ணத்தை குறைக்க வழிவகை செய்யும்.இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

குறிப்பாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தம் அதிகமாகும் போது தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது. எனவே உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா, தியானம், இசை கேட்பது போன்ற பழக்கங்களை பழகிக் கொள்ளலாம். இந்த பழக்கங்களை பின்பற்றும்போது மீண்டும் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே கூடாது. மீண்டும் புகைப்பழக்கத்திற்கு சென்றால் மேற்கூறிய வழிகளை பின்பற்றி எந்த பயனும் இல்லை. எனவே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைத்தால் அதிலிருந்து விடுபடுவதை நீங்களே காணலாம். அப்படி தாமாகவே புகைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ