spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சீதபேதிக்கு மருந்தாகும் கட்டுக்கொடி மூலிகை!

சீதபேதிக்கு மருந்தாகும் கட்டுக்கொடி மூலிகை!

-

- Advertisement -

சீதபேதிக்கு மருந்தாகும் கட்டுக்கொடி மூலிகை!கட்டுக்கொடி மூலிகை என்பது தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடியது. கட்டுக்கொடி மூலிகையில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகைகள் உண்டு. கட்டுக்கொடி குளிர்ச்சியூட்டியாகவும் உமிழ்நீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. தற்போது இதன் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த கட்டுக்கொடி மூலிகையின் இலையை மென்று சாப்பிடுவதால் ரத்த பேதி, சீத பேதி, மூலக்கடுப்பு எரிச்சல் போன்றவை குணமாகும்.

we-r-hiring

இந்த கட்டுக் கொடி இலையுடன் வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து அதனை அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

பெருங்கட்டுக் கொடி இலையை அரைத்து அதனை எருமை பாலில் செய்த தயிருடன் கொடுக்க பெரும்பாடு குணமடையும்.

மேலும் இந்த இலையுடன் மாம்பருப்பும் சம அளவு அரைத்து, அத்துடன் பால் மற்றும் சர்க்கரை கலந்து காலை, மாலை என இரு வேளைகள் கொடுத்து வர பேதி குணமடையும். இந்த மருந்தை சாப்பிடும் சமயத்தில் கஞ்சி ஆகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.சீதபேதிக்கு மருந்தாகும் கட்டுக்கொடி மூலிகை!

கட்டுக்கொடி இலையின் சாறு பிழிந்து அதனுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் ஆகியவை கலந்து வைத்தால் சிறிது நேரத்தில் கட்டியாகும். இதனை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சீத கழிச்சல் தீரும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ