Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெரி ஜாம் செய்யலாம் வாங்க!

வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெரி ஜாம் செய்யலாம் வாங்க!

-

குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெரி ஜாம் செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
சர்க்கரை – 2கப்
எலுமிச்சை – 2
ஸ்ட்ராபெரி – அரை கிலோ

செய்முறை:

ஸ்ட்ராபெரி ஜாம் செய்ய முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெரி ஜாம் செய்யலாம் வாங்க!

இப்போது ஸ்ட்ராபெரி ஜாம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரிட்ஜில் வெறும் தட்டு ஒன்றை குளிர வைக்க வேண்டும். இறுதியாக ஜாமின் பதத்தை கண்டறிய இது பயன்படும்.

இப்போது ஸ்ட்ராபெரியின் காம்பு பகுதியை நீக்கி அதனை பாதியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய பழங்களாக இருந்தால் அதனை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழத்தின் ஒரு பாதியை எடுத்து அதன் மேல் தோலை மட்டும் சுரண்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும். மீதி எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை, மேற்தோல் நீக்கிய எலுமிச்சை ஆகியவற்றை கலந்து மிதமான தீயில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.

அதன்பின் ஸ்ட்ராபெரி பழங்களை சேர்த்து வேக வைக்க வேண்டும். (குறிப்பு: மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விட வேண்டும்)

ஸ்ட்ராபெரி பழங்கள் வெந்து வரும் சமயத்தில் கரண்டியை வைத்து மசித்து விட வேண்டும். பழங்கள் நன்கு மசிந்து ஜாம் போன்ற பதத்திற்கு தயாராகி வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும். இதற்கு 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெரி ஜாம் செய்யலாம் வாங்க!

இப்போது ஃப்ரிட்ஜில் வைத்துள்ள தட்டை எடுத்து அதில் தயாரான ஜாமை சேர்த்து ஜெல் மாதிரி ஒட்டிக் கொள்ளும். அப்படி இருந்தால் தான் அது சரியான பதம்.

இப்போது ஜாம், ஜெல் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதனை சூடாக இருக்கும் போதே பாட்டிலில் இறுக்கமாக அடைத்து மூடி வைக்க வேண்டும். சுவையான ஸ்ட்ராபெரி ஜாம் தயார்.

கடைகளில் வாங்கும் ஸ்ட்ராபெரி ஜாமை போல, அதே சுவையில் வீட்டிலும் ஆரோக்கியமாக தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

MUST READ